Home » செய்திகள் » விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன் – அனல் பறக்க போகும் முதல் மாநாடு?

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன் – அனல் பறக்க போகும் முதல் மாநாடு?

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன் - அனல் பறக்க போகும் முதல் மாநாடு?

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கினார். அதுமட்டுமின்றி 2026 தேர்தல் தான் தன்னுடைய டார்கெட் என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து கட்சி பாடல் கொடியை அறிமுகப்படுத்தியதில் இருந்து, முதல் மாநாடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற இருக்கிறது.

அதற்கான பந்தக்கால் நடும் விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் மாநாட்டில் வரப்போகும் மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த மாநாட்டில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள போவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

விஜய்யின் TVK கட்சியில் சேர்ந்த Mr.கிளீன்

குறிப்பாக, ராகுல் காந்தி பெயர் கூட அடிபட்டது. இப்படி இருக்கையில் தற்போது ஒரு முக்கியமான நபர் TVK பார்ட்டியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வேற யாரும் இல்லை. இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கட்சியில் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024 – மீண்டும் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!

அதுமட்டுமின்றி, அவர் விஜய் அவரிடம் சில அறிவுரைகளை கேட்டதாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில், நம்பத் தகுந்த வட்டாரங்களும் இது தகவலை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இவரை மிஸ்டர் கிளீன் என்று இளைஞர்கள் அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி டிவிகே கட்சி மாநாட்டில் விஜய்யுடன் அவர் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் அரசியலில் மேலோங்கி நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது 

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!

ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top