
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் நடைபெற வில்லை. அதாவது அந்த தொகுதியில் போட்டியிட இருந்த உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து தொடர்ந்து தேர்தல் நடைபெறாமல் போனது.
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதாவது வருகிற ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு எண்ணும் நாளான ஜூலை 13ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.