
Breaking News: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் திமுக கட்சி சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. கட்சி சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்
இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ள நிலையில் தற்போது வரை 15 சுற்றுகள் முடிவடைந்துள்ளது. அதன்படி தற்போது திமுக வேட்பாளர் தான் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்து வருகிறார்.
Also Read: கடலுக்கு மேல் கயிற்றில் நடந்து சென்று சாதனை – அடேங்கப்பா.., தடுக்கி விழுந்தால் பரலோகம் தான் போல!!
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 17457 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து 3095 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
பழனியில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
கலைஞர் உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயம் வெளியீடு