Breaking News: விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை: சமீபத்தில் நாடாளுமன்ற1 பொதுத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியானது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதுமட்டுமின்றி நீண்ட ஆவ வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை
அதாவது விக்கிரவாண்டி தொகுதியில் எம் எல் ஏ வாக இருந்து வந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்திருந்தது.
மேலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் முடிவடைந்தன.
இதையடுத்து நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை என தகவல் வெளியாகி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு பதிவை முன்னிட்டு நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை என வெளியான தகவல் பொய்யானது என்று கூறி மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Also Read: ரூ 3 ஆயிரத்தை ஆட்டைய போட்டு தலைமறைவான நபர் – 18 வருடங்களுக்கு பிறகு கையும் களவுமாக பிடித்த போலீஸ்!
மேலும் தேர்தல் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை என்றும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் மக்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
vikravandi by election – election news – tamilnadu news
25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்
தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம்
திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்
- lok sabha election 2024 latest news ↩︎