விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் – விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், நேற்று முன் தினம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்தார். மேலும் அவரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. மரணம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு தகவல் அறிவித்திருந்தார். இதையடுத்து செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் பொதுவாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் என்றால் அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததால், இந்த தொகுதிக்கு மட்டும் அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் தற்போது நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இந்த இடைத்தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறுமா? அல்லது மக்களவை தேர்தல் முடிந்தவுடன் ன் நடைபெறுமா? இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.