vikravandi constituency by election 2024 விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். அவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற வில்லை. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த இடைத்தேர்தலுக்கு வருகிற 14ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், 21ம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த வாக்குகளை வருகிற ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 தொகுதிகளில் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.