லஞ்ச வழக்கு விவகாரம்.., கிராம நிர்வாக அலுவலர் திடீர் கைது.., திருச்சியில் பரபரப்பு!!லஞ்ச வழக்கு விவகாரம்.., கிராம நிர்வாக அலுவலர் திடீர் கைது.., திருச்சியில் பரபரப்பு!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடப்பு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திருச்சி கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த  துணை வட்டாட்சியர் தங்கவேல், பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் பதறிப்போன கண்ணன், இது தொடர்பான லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், 27.12.2023 அன்று துணை வட்டாட்சியரிடம் லஞ்சப் பணம் கொடுத்த போது, அவரை திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை விசாரித்த நிலையில், இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தற்போது அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பொன்முடி பதவியேற்பு விவகாரம்.., ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா?., நீதிமன்றத்தின் அழுத்தம் தான் காரணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *