
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியசாமி தாத்தா உடல்நிலை பயன்படுத்தி ராகுல் காந்தி மீது தற்போது பரவிய வதந்தி குறித்து அந்த சேனல் உறுப்பினர் ஒருவர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அன்பான மனிதன் ராகுல் காந்தி – வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!
யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் உறுப்பினர்கள். அவர்கள் கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த சேனலின் முக்கிய நபராக இருந்து வரும் பெரியசாமி தாத்தாவுக்கு சமீபத்தில் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரின் மருத்துவ செலவுக்காக ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு அவர் மருத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்பிரமணியன் வேலுசாமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், ” ராகுல் காந்தி அற்புதமான மனிதர். அவர் ஒரு முறை எங்களுடன் சேர்ந்து சமைத்து ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி மிகவும் பாசமாகவும், பண்பாகவும் நடந்து கொண்டார். அவரிடம் நாங்கள் எந்த உதவியும் கேட்கவில்லை. மேலும் எங்களது அணியின் வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்த வேண்டுகிறோம்! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.