
தமிழகத்தில் அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தேர்தலை எதிர்த்து ஒரு கிராமம் முழுவதும் கருப்பு கொடி வைத்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்புக்கொடி போராட்டம்:
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு கிராமம் தேர்தலை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை செங்குணம் கொல்லைமேடு அருகில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. அங்கு 5 தலை முறைகளுக்கு மேல் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அந்த கிராமத்தில் எந்த வசதியும் இல்லாமல் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். சொல்ல போனால் பஸ் வசதி கூட இல்லை. தேர்தலின் போது அங்கு வாழும் மக்கள் நான்கு, ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று வாக்களித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் பேருந்து வசதி குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து வந்துள்ளனர். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இம்முறை எங்கள் கிராமத்திற்கு வாக்குச்சாவடி மையம் வைத்தால் மட்டுமே 700 வாக்காளர்கள் வாக்களிக்கப்போம் என்று வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி நான்கு நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசு நாங்கள் உங்கள் அடிமைகள் இல்லை என்று வாசகம் பலகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.