மகளிர் உரிமைத் தொகை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசாங்க திட்டங்களை வைத்து தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் திண்டிவனம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உரிமை தொகைக்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மர்ம நபர்கள் பொய்யான தகவலை பரப்பி உள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த தகவலை நம்பி கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முகாம் நடைபெறவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Also Read: விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் – மத்திய பிரசதேச காவல்துறை அதிரடி ஆக்சன்!!
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கடுமையான எச்சரிக்கையை செய்தி வாயிலாக அறிவித்துள்ளார். பொய்யான தகவலை நம்பி மக்கள் யாரும் அலைய வேண்டாம். மேலும் அரசின் திட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?