விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி: தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் பள்ளிக்கு போதையில் வந்த மாணவி
இந்நிலையில் அந்த பள்ளிக்கு தான் ஒரு மாணவி மது போதையில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த செப் 8-ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவி மது குடித்துவிட்டு வகுப்புக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கு போதை தலைக்கேறிய நிலையில் திடீரென அவருக்கு தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவி தன்னிலை மறந்து சக மாணவர்களையும், ஆசிரியரையும் ஆவேசமாக திட்டியுள்ளார். இதில் ஷாக்கான ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் விசாரணை நடத்தினர்.
Also Read: திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – பீதியில் மக்கள்!
அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மது பார்ட்டி வைத்துள்ளார். இதில் மாணவியும் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயார் புகார் கொடுத்த பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்