விழுப்புரம் கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம் : விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும் கே.ஆர்.பாளையம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசாங்க குடிநீர் வசதி போதிய அளவுக்கு இல்லாததால் அங்கு இருக்கும் திறந்த வெளி கிணற்றில் தான் மக்கள் குடிக்க தண்ணீர் எடுக்கின்றனர். இந்நிலையில் இந்த திறந்த வெளி கிணற்றில் மனித மலம் கழிக்கப்பட்டதாக ஊர் மக்கள் குடிநீர் வாரியத்தில் புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து மக்கள் புகார் கொடுத்த பேரில் குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் மோகன் கிணற்றுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிணற்றுக்குள் இறங்கி அவர் ஆய்வு செய்த போது தண்ணீரில் மனித மலம் கலக்க வில்லை என்று, தண்ணீரில் தெரிவது தேன் அடை என்று குடிநீர் வாரியம் நிர்வாக பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தெரிந்த பின்னரே அந்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு உயிரே வந்தது. தற்போது வழக்கம் போல மக்கள் அந்த கிணற்றில் தண்ணீர் பிடிக்க தொடங்கிவிட்டனர். விழுப்புரம் கே.ஆர். பாளையத்தில் உள்ள கிணற்றில் மனித மலம்