விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு
விழுப்புரத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழப்பு: இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் கடந்த 19 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மேலும் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெறும் என்று அப்போது முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீலகிரி, திருப்பூர், ஈரோடில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று புகார்கள் எழுந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
உடனே சிறிது நேரத்தில் கேமராக்கள் செய்து செய்யப்பட்டதாகவும் விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடங்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. அதாவது, விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.28 மணி முதல் 9.58 மணி வரை சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. மின் பழுது காரணமாக தான் கேமராக்கள் பழுதாகி இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் சரி செய்துவிட்டதாகவும் மாவட்ட தேர்தல் ஆணையர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.