
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எம்.பி. சீட்: சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தேர்வானார். அவர் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட் என்பவரை எதிர்கொள்ள இருந்த நிலையில், வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி வினேஷ் போகத் disqualified செய்யப்பட்டார்.
இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வெடிக்க தொடங்கியது. பலரும் அந்த வீராங்கனைக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எம்.பி. சீட்
அதில் அவர் பேசியதாவது, ” பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க மிக தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். paris olympic wrestling final 2024
Also Read: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மேலும் இன்று அரியானாவில் ஒரு ராஜ்யசபா இருக்கை காலியாக இருக்கிறது. எனவே காங்கிரசுக்கு பெரும்பான்மை இருந்தால் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தோல்வியை தழுவிய அடுத்த நிமிஷமே அவர் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Vinesh Phogat
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்