கேரளாவில் கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம். 1990 களில் நடந்த ருசிகர சம்பவம். கேரளா போலீஸ் வங்கி கொள்ளையில் துப்பு துலக்க ஜோதிடரை நாடியபோது, அவர் கூறியபடி 100 சவரன் நகையையும் மீட்டதாக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்த அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கொள்ளை போன நகைகளை ஜோதிடம் பார்த்து மீட்டோம்
கேரளாவில் முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி யாக இருந்து ஓய்வு பெற்றவர் அலெக்சாண்டர் ஜேக்கப். இவர் தான் பணியில் இருந்த போது நடந்த மறக்கமுடியாத சம்பவங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் 1990 ல் அவர் கண்ணூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது நடந்த ருசிகர சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி என்ற இடத்திற்கு அருகே பூலக்குற்றியில் செயல்பட்டு வந்த ஒரு கூட்டுறவு வங்கியில் 100 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.இந்த சம்பவத்தில் எந்த துப்பும் துலங்காததால் ஜோதிடத்தை நாட முடிவு செய்தனர். அப்போது ஜோதிட சக்கரவர்த்தி பொதுவால் என்பவரை சந்தித்து வங்கி கொள்ளை குறித்தும், அது தொடர்பாக நடந்த விசாரணை குறித்தும் விளக்கினேன்.அப்போது அவர் வங்கி கொள்ளை நடந்த போது இருந்த வங்கி மேலாளரின் ஜாதகத்தை கொண்டு வரச்சொன்னார். அந்த ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த கொள்ளை சம்பவம் வங்கி ஊழியர் ஒருவரின் உதவியுடன் நடந்துள்ளது என்று கூறினார்.
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு – விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி !
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வங்கியில் கிழக்கு திசையில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. அவை சாலையோரம் உள்ள தென்னை மரங்களுக்கு நடுவில் உள்ள ஒரு கிணற்றில் உள்ளதாக ஆணித்தரமாக கூறினார். இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதிக்கு சென்று பார்த்ததில் தென்னை மரங்களுக்கு நடுவே ஒரு கிணறு இருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தோம். பின்னர் அதில் உள்ள தண்ணீரை மின்மோட்டார் மூலம் வற்ற வைத்தோம்.
கடைசியாக கிணற்றில் ஒரு இரும்பு பெட்டி கிடந்தது. அந்த லாக்கர் உள்ள இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் களவு போன 100 சவரன் நகைகள் அப்படியே இருந்தது. ஆனால் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தண்ணீரினால் சேதம் ஆகிவிட்டன. பின்னர் நடந்த புலன் விசாரணையில் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக வங்கி ஊழியர் மற்றும் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.