Home » செய்திகள் » விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி?.., ரஞ்சி டிராபியில் அப்ஸ்காண்ட் ஆக பிளானா?

விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி?.., ரஞ்சி டிராபியில் அப்ஸ்காண்ட் ஆக பிளானா?

விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி?.., ரஞ்சி டிராபியில் அப்ஸ்காண்ட் ஆக பிளானா?

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு திடீர் கழுத்து வலி ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம்  ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடிய படுமோசமான ஆட்டம் தான். ஃபர்ஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, அப்புறம் 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வந்தார். இதனால் கோலி, ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அவர்களே ஓய்வை அறிவித்தால் நல்லது என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ரஞ்சி டிராபி கோப்பையில் இந்திய அணி விளையாட இருக்கிறது. எனவே இதில், இந்திய சீனியர் வீரர்கள் விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர். அதன்படி, ரோஹித், விராட் கோலி விளையாட இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில்,விராட் கோலிக்கு கழுத்தில் திடீர் வலி ஏற்பட்டுள்ளது.

மேலும், அவர் வலி நிவாரணத்திற்காக தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்று இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. எனவே இதன் காரணமாக விராட் கோலி ரஞ்சி டிராபியில் விளையாடுவது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் டெல்லி அணிக்கு ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகள் மீதம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top