தற்போது சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024) ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நிலை என்ன என்பது குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து (28.09.2024)
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பட்டாசு ஆலை வெடிவிபத்து :
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருவதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்ட சமயத்தில் இதன் அதிர்வு பல கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாக அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களின் நிலை என்ன ?
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் சுமார் 40 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் பலர் அலறியடித்துக்கொண்டு ஓடிய நிலையில் மற்ற தொழிலாளர்களின் நிலை என்ன என்பதை அறிவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார் – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !
அந்த வகையில் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால் யாரும் அருகில் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது என்றும், 4 தீயணைப்பு வாகனங்கள் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
சமீபத்திய செய்திகள் :
உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை – நிர்வாகம் அதிரடி முடிவு!
தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் – நீலகிரி உதகையில் 2வது மலர் கண்காட்சி