தமிழகத்தில் இது தான் முதல் முறை - மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!தமிழகத்தில் இது தான் முதல் முறை - மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. அது எப்படி திமிங்கலம்!

Breaking news: தமிழகத்தில் இது தான் முதல் முறை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பிரசவத்தின் போது தாய் அல்லது சேய் இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரசவ வலியை தாங்குவதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு தொடர்ந்து சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான மற்றும் முறையான பரிசோதனைகள் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தகைய ஸ்பேஸிலிட்டி இருந்தாலும் கூட சிசுக்கள் இறந்தும் போகும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பிரசவ சிகிச்சையின் போது தாய்க்கும் சேய்க்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், அதாவது பலி ஏதும் இன்றி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சாதித்து காட்டி உள்ளனர். அது எப்படி திமிங்கலம்? என்று நீங்கள் கேட்கலாம். அது எப்படி நடந்தது என்பது வாங்க விரிவாக பார்க்கலாம். zero maternal death

தமிழ்நாட்டில் கடந்த 2022-2023 ஆண்டில்  மகப்பேறுவின்போது பலி எண்ணிக்கை  52.3 சதவீதமாக இருந்தது. அதற்கு பிறகு  2023-2024 ம் ஆண்டில் 45.5 சதவீதமாக குறைந்தது. 2023-2024 ம் ஆண்டில் மற்ற மாவட்டங்களில் ஒரு சில உயிர் பலி இருந்தாலும் கூட, விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது எந்த பலியும் நேரிடவில்லை. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் கிட்டத்தட்ட 22 ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்கின்றன.

எனவே அந்த 22  22 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை சுமார் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பிரசவத்தின்போது தாயும், சேயும்  நலமாக இருக்கின்றனர்.

Also Read: தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! ரேஷன் கடையில் இனி எல்லாம் பாக்கெட்டில் தான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எனவே இதன் மூலம் ஓராண்டில் மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டமாக விருதுநகர் சுகாதார மாவட்டம் மாறி உள்ளது. virudhunagar tamil nadu

அதற்கு அடுத்து சிவகாசி சுகாதார மாவட்டம் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிவகாசி சுகாதார மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி வரை 2 தாய்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *