Home » ஆன்மீகம் » விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் செல்லலாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் செல்லலாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் செல்லலாம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தற்போது விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை தினந்தோறும் அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனைச் சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர்.

கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் திரும்பிவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் செல்ல வேண்டும். அத்துடன் அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி வேறு எந்தப் பகுதியிலும் பயணம் செய்யக்கூடாது.

இதனை தொடர்ந்து மலையேற்றப் பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது.

மேலும் விருதுநகர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் செல்லலாம், இது போன்ற வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top