ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஷால்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். தற்போது அவர் துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான “மார்க் ஆண்டனி” படம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய நிலையில், விஷாலுக்கு வில்லனாக SJ சூர்யா நடித்திருந்தார். மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் மார்க் ஆண்டனி 2 குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி 2 படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
துப்பறிவாளன் 2 படத்தை முடித்த பிறகு படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் தல அஜித்தை வைத்து “குட் பேட் அக்லி” என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!