Home » சினிமா » எல்லாம் நன்மைக்கே – சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.., பச்சை கொடி காட்டிய சூரி!!

எல்லாம் நன்மைக்கே – சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.., பச்சை கொடி காட்டிய சூரி!!

எல்லாம் நன்மைக்கே - சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்.., பச்சை கொடி காட்டிய சூரி!!

நடிகர் விஷ்ணு விஷால் – சூரி நிலம் பிரச்சனை விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இருவரும் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தற்போது சிறப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படத்தின் மூலம் அவர் மட்டும் பிரபலமாகவில்லை. இப்படத்தில் இடம்பெற்ற சூரியின் பரோட்டா காமெடி அதிகம் பேசப்பட்டது. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமான சூரியுடன் சேர்ந்து விஷ்ணு விஷால் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர்களின்  காம்போவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் நிலம் பிரச்சனை காரணமாக அவர்கள் நட்புக்குள் விரிசல் ஏற்பட்டது.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதை நிறுத்தி கொண்டனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது X வலைதள பக்கத்தில் அப்பா மற்றும் சூரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, ” எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில்.. பாசிட்டிவ் எண்ணங்களை பரப்புவோம் சூரி அண்ணா. லவ் யூ அப்பா’ என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சூரி எக்ஸ் தளத்தில் ரீ ட்வீட் செய்து, ‘நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. நன்றிங்க’ பதிலளித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் –  கைக்கு வரும் சூப்பர் டெக்னாலஜி… ரூ.101 கோடியில் அசத்தலான திட்டம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top