Home » சினிமா » மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!

மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!

மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!

சின்னத்திரை நடிகை மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் அதிகம் வரவேற்பு பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜே சித்ரா. அந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு அந்த முல்லை கேரக்டர் பேசப்பட்டது. இப்படி சின்னத்திரையில் பிசியாக இருந்து வந்த அவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்ய தயாராக இருந்தார். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டல் அறையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடைய காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இப்பொழுது வரை அவரது தற்கொலைக்கான நிஜ காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் மறைந்த விஜே சித்ரா வீட்டில் மீண்டும் மரண ஓலம் கேட்டுள்ளது. அதாவது, மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவுடைய தந்தை காமராஜ் தனது வீட்டில் மகளை போல தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜயகாந்த் பட இயக்குனர் மரணம்.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!

கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினம்.., தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு!!

எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!

நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!

மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top