
VJ சித்து மீது பரபரப்பு புகார்.. எதற்கு தெரியுமா? தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருப்பவர் தான் விஜே சித்து. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவருடைய “VJ Siddhu vlogs” என்ற வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறது. இந்நிலையில் இவர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதாவது, சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஷெரின், ” விஜே சித்து விலாக்ஸ் (VJ Siddhu vlogs) சேனலில் நான் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதாவது அவர் போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஒட்டிக் கொண்டு வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். எனவே இதை பார்த்து இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த வீடியோவில் ஆபாச வார்த்தைகளும் பேசியுள்ளார். எனவே இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு இதே வழக்கில் TTF வாசன் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Vj Siddhu – VJ Siddhu vlogs – youtube – youtuber king
தாய்ப்பால் விற்பனை விவகாரம் – உணவு பாதுகாப்பு துறை எடுத்த அதிரடி முடிவு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்