
வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது. ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தற்போது தனது உடல்நிலைக் குறித்தும் வி.கே.கார்த்திகேய பாண்டியன் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நவீன் பட்நாயக் உடல் நிலை :
ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் கூறிஇருந்தார். இது நவீன் பட்நாயக் கூறிய போது பிரதமர் மோடிக்கு எனது உடல்நிலையில் இவ்வளவு அக்கறை இருந்தால் இது குறித்து பொதுக் கூட்டத்தில் சத்தமாகச் சொல்வதை விட தொலைபேசியை எடுத்து என்னிடம் விசாரித்திருக்கலாம் என்றார் மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு முயற்சி செய்கிறார்.
அத்துடன் எனது உடல்நிலை குறித்து டெல்லியில் உள்ள சிலர் கடந்த 10 ஆண்டுகளாக வதந்தி பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது :
இதையடுத்து முதலமைச்சர் என்ற வகையில் நான் எடுக்க வேண்டிய முடிவுகள் அனைத்தையும் என் சார்பாக வி.கே.பாண்டியன் எடுக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அபத்தமானது. இது குறித்து நான் ஏற்கெனவே அடிக்கடி கூறியுள்ளேன். மேலும் இது பழைய குற்றச்சாட்டுஎனவும் வி.கே. பாண்டியன் என்னுடைய அரசியல் வாரிசு கிடையாது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு – முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !
அந்த வகையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் மற்ற தலைவர்களை விட வி.கே.பாண்டியனை முன்னிறுத்துவதாகச் சொல்வது முட்டாள்தனமானது. பிறகு பிஜு ஜனதா தளத்தின் எதிர்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள் என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.