
Vodafone Recharge price hike வோடபோன் ரீசார்ஜ் விலை உயர்வு: இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைந்த உலகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். சொல்லப்போனால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனிதர்களின் வாழ்வியல் என அனைத்திலும் செல்போன் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த செல்போனில் உள்ள இணையதள மூலம் உலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
வோடபோன் ரீசார்ஜ் விலை உயர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதற்கு முக்கியமாக நெட்வொர்க் தேவைப்படுகிறது. அப்படி இந்தியாவில் நெட்வொர்க் வைத்திருக்கும் பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்க குறிப்பிட்ட கட்டணங்களை வசூலித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜியோ, ரிலையன்ஸ் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், நேற்று ஏர்டெல் நிறுவனமும் எக்குத்தப்பாக Recharge விலையை அதிகரித்தது.
Also Read: Airtel Recharge Hike : ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீச்சார்ஜ் விலை உயர்வு.. புதிய கட்டணங்கள் எவ்வளவு? முழு விவரம் உள்ளே!
இதனால் செல்போன் யூசர்கள் சோகத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு நிறுவனமும் Recharge விலையை அதிகரித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது வோடபோன் நிறுவனம் தனது சேவை கட்டணத்தை 10 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய கட்டணம் வருகிற ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. இதனால் பயனாளிகள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.