
வாக்காளர் அடையாள அட்டை 2024. 18 வது நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க தயார் நிலையில் இருக்கிறோம். வாக்களிக்க நமக்கு தேவையான முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. ஆனால் இந்த வாக்காளர் அடையாள அட்டை எப்போது கொண்டு வரப்பட்டது? யார் இதற்கு காரணம்? எதனால் கொண்டு வரப்பட்டது ? என்பது போன்ற பல தகவல்களை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது நாடு முழுவதும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தான் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1993 ம் ஆண்டு தான் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 140 கோடி மக்கள் தொகை நிறைந்த நாட்டில் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது என்பது ஒரு இமாலய சாதனை தான். இது மற்ற உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்தது.
இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென் தான் 1957 ல் இந்த வாக்காளர் அடையாள அட்டைக்கான விதையை போட்டவர். நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் இவர் தான் என்று அறிவதற்கும், வாக்கு பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கான மசோதா 1958 நவம்பர் 27 ம் தேதி தான் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.இதை அறிமுகம் செய்தவர் சுகுமார் சென்னின் சகோதரர் அசோக் குமார் சென் ஆவார். இறுதியில் 1958 டிசம்பர் 30 ல் இந்த மசோதா நிறைவேற்ற பட்டு சட்டமாகியது.
ஐஸ்கிரீமில் விந்தணுக்கள்.., இளைஞர் செய்த காரியம்.., பதற்றத்தில் மக்கள்.., அதிர்ச்சி வீடியோவால் அதிரடி காட்டிய போலீஸ்!!
வாக்காளர் அடையாள அட்டையை மக்களிடையே கொண்டு வர தொடர்ந்து தாமதம் ஆகி கொண்டே வந்தது. இறுதியில் 1960 ல் கொல்கத்தா தென்மேற்கு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் பெண்கள் பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. இந்த ஒரு தொகுதிக்கே ரூ.25 லட்சம் வரை செலவானது. இது தேர்தல் நடத்தும் செலவை விட அதிகமாக இருந்ததால் இந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் இந்த திட்டம் 19 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்பெற்றது. 1979 ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இது ஓரளவு சாத்தியமானதால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இது செயல்படுத்தப்பட்டது. இறுதியாக 1993 ல் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை திட்டம் வெற்றி பெற்றது. இந்த சாதனையை செய்து காட்டியவர் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த டி.என் . சேஷன் ஆவார்.
ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை கறுப்பு நிறத்தில் இருந்தது. தற்போது அழகிய வண்ண புகைப்படத்துடன் மின்னணு வாக்காளர் அட்டை வந்து விட்டது. மின்னணு வாக்காளர் அட்டை என்பது திருத்த முடியாத பி.டி.எப் பாதிப்பாகும். மேலும் இதில் வரிசை எண், பகுதி எண், பாதுகாப்பான QR குறியீடும் உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை 2024
இந்தியாவில் பிறந்த 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் இந்த வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. 18 வயது ஆனவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து அதனை உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பித்து கொள்ளலாம்.
மனநோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர் என்று அறிவிக்கப்பட்டவர்க்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது.