தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க… வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க… வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Breaking News: தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க: சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை சட்டமன்ற தேர்தலுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வாக்காளர்களை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று (ஆக. 20) முதல் தொடங்கியுள்ளது.

தமிழக வாக்காளர்களே ரெடியா இருங்க

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தலின் போது வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையிலான முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. election commission

Also Read: TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு நடத்தும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – எப்போது தெரியுமா?

மேலும் இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி  அக்டோபர் 18-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி அக்டோபர் 29-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே அந்த (அக்டோபர் 29) தேதியில் இருந்து நவம்பர் 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல்,பதிவுகளில் இருந்து நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவைகளுக்காக விண்ணப்பங்கள் பெறப்படும்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *