Breaking News: வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்: வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள சில திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்
மசோதாவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
- தீர்ப்பாயம் என்னும் முறை திருத்தி அமைக்கப்படும். இதன் மூலம் தீர்ப்பாயத்தின் முடிவை நம்மால் எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும்.
- குடும்ப சொத்துக்களில் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும்
- மேலும் சொத்து பதிவு செய்வதற்கு முன்னர், கண்டிப்பாக வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும். இதுகுறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படும்
- அதுமட்டுமின்றி மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில், முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். அதே போல் வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடம்பெற வேண்டும்.
- வக்பு சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும். அதன் தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.
- அகாகானிஸ் மற்றும் போராக்களுக்கென தனி வாரியம் அமைக்கப்படும்
- மேலும் வக்பு சொத்துக்களை, சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.
- ஆனால் இந்த வக்பு சொத்துக்களுக்கு, இனி வக்பு வாரியங்கள் மட்டுமே அதிகாரம் உடையதாக இருக்காது வக்பு வாரிய சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும்.
Also Read: காதலிக்கு ஐபோன் வாங்க அடிமடியில் கையை வைத்த மாணவன் – தாயின் நகைகளை திருடிய மகன்!
இவ்வாறு வக்பு சொத்து நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் பல திருத்தங்கள் புதிய மசோதாவில் இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் மீதான விவாதம் நடந்து வருகிறது. காங்கிரஸ்,சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு