Breaking News: வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள்: கேரளாவில் உள்ள வயநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையுடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பிறகு தற்போது 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாட்டில் 4 பேர் உயிருடன் மீட்ட ராணுவ வீரர்கள்
அதாவது, வயநாட்டில் உள்ள சூரல் மலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் படவெட்டி குன்னு என்ற இடத்தில் வாழ்ந்து வந்த நான்கு பேரை காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் ராணுவத்தினரிடம் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட தொடங்கிய ராணுவ வீரர்கள் இலகுரக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் வசித்த வீட்டுக்கு சென்று பரபரப்பாக தேடி வந்தனர்.
Also Read: கலைஞரின் 6வது நினைவு நாள் – முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு – படையெடுக்கும் திமுகவினர்!!
அப்போது சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த 2 ஆண்கள், 2 பெண்கள் காயத்துடன் உயிருக்கு போராடி வந்ததை பார்த்த ராணுவ வீரர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது அவர்கள் நலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்
கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை
இலங்கை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம்
நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்