Breaking News: வயநாடு நிலச்சரிவு விவகாரம்: சமீபத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கேரளாவின் வயநாடு நிலச்சரிவு தான். இந்த சம்பவம் எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவத்தில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பாறையில் கிட்டத்தட்ட 5 நாட்கள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த மூன்று பேரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். landslide
வயநாடு நிலச்சரிவு விவகாரம்
இந்நிலையில் தமிழக ஐஏஎஸ் குழு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு வயநாட்டில் வசித்து வரும் தமிழர்கள் 21 பேரும் வேலைக்காக சென்ற 3 பேரும் என 24 தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. wayanad resorts
Also Read: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இன்னும் 25 தமிழர்களை காணவில்லை என்று தமிழகத்திலிருந்து சென்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், தெரிய வந்துள்ளது. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டு நிவாரண முகாமில் மட்டும் 130 தமிழர்கள் உள்ளனர் என்று தமிழக ஐஏஎஸ் குழு தெரிவித்துள்ளது. Wayanad Landslide Issue
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை