Breaking News: வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 29ம் தேதி வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதன்படி சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரி மலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வயநாடு நிலச்சரிவு
இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து மண்ணால் மூடப்பட்டது. குறிப்பாக 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 1000 த்திற்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Wayanad landslide issue
இந்த தருவாயில் வயநாட்டில் உயிரிழந்த தனது மகளின் கையை மட்டும் வைத்து இறுதி சடங்கு செய்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதாவது சமீபத்தில் நடந்த நிலச்சரிவில் ரங்கசாமி தனது மகளை காணவில்லை என்று மீட்புப்படையினரிடம் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஜீசாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Also Read: புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு – இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்!!
ஆனால் எவ்வளவு தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இறுதியாக அவரது கை மட்டும் மீட்பு படையினருக்கு சிக்கியது.
அந்த கை விரலில் அவருடைய கணவர் பெயர் பொறிக்கப்பட்டிருந்த மோதிரத்தை வைத்து தான் அவருடைய தந்தை அடையாளம் கண்டார்.
மேலும் இறந்த மகளின் கையை வெள்ளை துணியால் சுற்றி தகன மேடையில் வைத்து அவரின் அழுகையை பார்த்த பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு
தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை