வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு பகுதிகளாக நடத்தப்பட்டு கடைசியாக ஜூன் 1ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து மக்கள் பலரும் எதிர்பார்த்த 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதன்படி பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வரும் நிலையில் அதற்கு டப் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கூட்டணி இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம் பியாக இருந்து வந்தார் ராகுல் காந்தி. தற்போது வயநாடு தொகுதியை சேர்த்து, ரேபரேலி தொகுதி எம்.பியாக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி காங்கிரஸ் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராகுல் காந்தி புதிதாக வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதி எம்.பியாக தொடர இருப்பதாகவும், வயநாடு தொகுதி எம்.பி பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? – congress party mp – Wayanad MP – Rahul Gandhi – lok sabha election 2024 news – india election 2024

தமிழகத்தில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் லிஸ்ட் – மற்ற வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்த கருணாநிதி வாரிசு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *