தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், சில முக்கிய மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சொல்ல போனால் 120 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழை முதல் கனத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் வருகிற ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவ கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். இது தவிர அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுமட்டுமின்றி மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால் தாராளமாக கடலுக்குள் செல்லலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.