மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட இளம்பஜார் வாக்கு சாவடி மையத்தில் நடைபெறும் வாக்கு பதிவை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் நேரலையாக கண்காணிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.

அந்த வகையில் வாக்கு மையத்தில் இருந்து நபர் ஒருவர் வெளியே வருவதும், அதன் பின்னர் உள்ளே செல்வதும் தெரிந்தது. இதனால் அந்த நபருக்கு எதிராக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு – 15 பூத் ஏஜென்ட் கடத்தல்-  ஆந்திர தேர்தல் வாக்குப்பதிவில் கடும் மோதல்!

இதனால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *