மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு … என்ன காரணம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து நாளை ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. மேலும் நாளைக்கே முடிவையும் அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குகளை எண்ணுவதற்கு அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக ஜூன் 1ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த வாக்குபதிவின் போது வன்முறை வெடித்தது.

குறிப்பாக ஒரு சில இடங்களில் EVM இயந்திரங்கள் சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  மேற்கு வங்க மாநிலத்தில் பராசத் மற்றும் மதுராபூர் மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சில முறைகேடுகள் நேர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தொகுதிகளுக்கு மட்டும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி  மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு – loksabha election 2024 – india election 2024 – tamilnadu election news – india election news – election Commission

இந்த பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது? செக் வைத்த ICC நிர்வாகம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *