Breaking News மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து1: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா என்கிற பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தான நிலையில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதாவது கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சியால்டாவிற்கு சென்று கொண்டிருந்த போது நிலையில் டார்ஜிலிங் மாவட்டம் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு ஒன்று மீது ஒன்றாக மோதிக்கொண்டன. உடனே தகவல் அறிந்து சமய இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் பயணிகளை காப்பாற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதில் விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் அதிகமாக சேதமடைந்த நிலையில் நான்கு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான பயணிகள் காயமடைந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பயணிகள் பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்த ரயில் விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா?
சென்னையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
- Train accident news 2024 ↩︎