Home » செய்திகள் » வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு – நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு வாய்ப்பு – எந்த டீமில் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு – நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு வாய்ப்பு – எந்த டீமில் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு - நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு வாய்ப்பு - எந்த டீமில் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணி அறிவிப்பு: ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் அடுத்தடுத்து தங்களது அணிகளின் வீரர்கள் பட்டியலை    வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின்  பட்டியல் வெளியிட்டது. மேலும் நடக்க இருக்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோமன் பவெலும், துணை கேப்டனாக அல்ஜாரி ஜோசப் நியமிக்கப்பட்டனர்.

மேலும் இவர்களது தலைமையில் ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் களம் காண இருக்கின்றனர். இதற்கிடையில் அமெரிக்க அணியும் தங்களது பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி இவர்களது அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து அணிக்காக 3 உலக கோப்பை போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டு, தற்போது 33 வயதில் அமெரிக்காவுக்காக ஆட வந்துள்ளார்.

கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது – பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top