Home » செய்திகள் » கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் குறித்து தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் நைல் வைரஸ் என்பது பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கு, கொசுக்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது. மேலும் க்யூலெஸ் எனப்படும் வகையை சேர்ந்த கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும். மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லையென்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. எலைசா, பிசிஆர்பி சோதனை மூலம் இந்த வைரஸ் தொற்றினை கண்டறியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு ! 10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்குமே16 முதல் விண்ணப்பம் – அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு !

காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top