Home » பொது » பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை - மத்திய அரசின் அசத்தல் Scheme!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பீமா சகி யோஜனா திட்டம் மூலமாக 18 – 70 வயதுடைய பெண்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சித் திட்டத்தில் மாத உதவித் தொகையும் வழங்கப்படும்.

உதவித் தொகை:

உலகில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் விதமாக தான் பல திட்டங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் இருக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விதமாக பீமா சகி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் வாயிலாக பெண்களுக்குப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வாங்குவதோடு மட்டுமின்றி அவர்களின் தன்னம்பிக்கைக்கும் ஊன்று கோலாக இருந்து வருகிறது. எனவே பீமா சகி யோஜனா திட்டம் குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.

விண்ணப்பிக்க தகுதி:

இதில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் பெண்கள் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
குறிப்பாக வயது 18 முதல் 70 வயது வரை இருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி பயிற்சிக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவார்கள், இருந்தாலும் அவர்கள் எல்ஐசி-யின்  வழக்கமான ஊழியர் பலன்களைப் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவித்தொகை விவரங்கள்:

இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு 3 வருட பயிற்சி வழங்கப்படும். அவை கீழ்வருமாறு,

  • முதல் ஆண்டு: ₹7,000/மாதம்
  • இரண்டாம் ஆண்டு: ₹6,000/மாதம்
  • மூன்றாம் ஆண்டு: ₹5,000/மாதம்

மேற்கண்ட உதவித்தொகை அனைத்தும், பெண்களின் பயிற்சி காலத்தில் நிதி உதவியை வழங்கும் நோக்கத்தில் இருந்து வருகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/test2  தளத்திற்கு செல்ல வேண்டும்
  • இதையடுத்து  ‘கிளிக் ஹியர் ஃபார் பீமா சாகி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர், விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அப்புறம் கூடுதல் தகவல்களை கொடுக்க வேண்டும், அதாவது உங்களுக்கு ஏதேனும் எல் ஐ சி முகவர் தெரிந்தால் அவருடைய தகவலைக் கொடுக்கவும்.
  • இதையடுத்து திரையில் தெரியும் கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.
  • இறுதியாக நீங்கள் சமர்ப்பிப்பு பொத்தானைக் கிளிக் செய்தால் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த திட்டத்தின் பலன்கள்?

பீமா சகி திட்டத்தில் சேரும் பெண்களுக்கு முதல் 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது பெண்களுக்கு சில நிலையான தொகையும் (சுமார் ரூ. 2 லட்சத்துக்கு மேல்) அளிக்கப்படும். அதே சமயம், அவர்களுக்கு பயிற்சி முடிந்ததும், எல்ஐசி இன்சூரன்ஸ் ஏஜென்ட்-களாக பணி நியமனம் செய்யப்படும். அதுமட்டுமின்றி, இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மேம்பாட்டு அதிகாரிகளாகவும் வாய்ப்பு கிடைக்கும். அதே போல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு பாலிசிகள் அதாவது ஆண்டுக்கு 24 பாலிசிகள் விற்க இலக்கு கொடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் போனஸ் தவிர கமிஷனாக 48 ஆயிரம் கிடைக்கும், அதாவது ஒரு பாலிசிக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

TN Govt AABC Scheme: அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலம் ரூ.1.5 கோடி பெறுவது எப்படி?

Central Government Schemes மத்திய அரசின் திட்டங்கள் 2025!

உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?

கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top