இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும். உங்களுக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வரவில்லையா ? அப்படியென்றால் உங்கள் உணவுமுறையை மாற்ற வேண்டியது கட்டாயம். எந்த உணவு பொருட்களினால் நமது தூக்கம் பாதிக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் தூக்கம் வர என்ன சாப்பிட வேண்டும்
மனிதன் வாழ்வில் தினசரி பொழுதில் 3 ல் 1 பங்கு தூக்கத்தில் தான் செலவிடுகிறான். இந்த தூக்கம் தான் நமது வாழ்வை புத்துணர்ச்சியாகவும், அடுத்த கட்ட வேலைகளில் நம்மை தயார்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. தினசரி 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது கட்டாயம் அவசியம். அதனால் தான் மருத்துவ நிபுணர்களும் நம்மை 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். என்னதான் நிபுணர்கள் கூறினாலும் இங்கே சிலருக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் வருவதில்லை.
சில சமயங்களில் நாம் எடுத்து கொள்ளும் தொடர் உணவு பழக்கங்களாலும் நமது தூக்கம் கெட வாய்ப்புண்டு. தூக்கமின்மையால் உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் மன ஆரோக்கியமும் கெடுகிறது. அதிலும் இரவில் நாம் எடுத்து கொள்ளும் உணவு பொருட்களில் பெரும் கவனம் தேவை. இதனால் சுகாதார வல்லுநர்கள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் சில உணவு பொருட்களை இரவில் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
காஃபின் :
காஃபின் கொண்ட உணவு மற்றும் பானங்களை இரவு நேரத்தில் உட்கொள்ளக்கூடாது. இது பெரும்பாலும் தூக்கத்தை கெடுக்கும்.அதனால் தான் இரவு நேரத்தில் காபி மற்றும் தேநீர் அருந்த கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த காஃபின் ஆனது ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் களிலும் பயன்படுத்தப்படுகிறது. காஃபினேட் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதிலுள்ள காஃபின் மற்றும் சாக்லேட் ஆனது நமது ஹார்மோன்களை தூண்டுகிறது.இது இரவு முழுவதும் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தமிழக மக்களே.., இனி ரேஷன் கடையில் இது நடக்காது.., ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிக்கை.., அமைச்சர் அறிவிப்பு!!
அமில மற்றும் துரித உணவுகள் :
இரவில் தூங்க செல்லும் முன்பு புளிப்பு பழச்சாறு, பச்சை வெங்காயம், தக்காளி சாஸ் போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளாதீர்கள். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். மேலும் துரித உணவுகள் என்று சொல்லப்படும் நூடுல்ஸ், பீட்ஸா, மோமோஸ், பாஸ்தா மற்றும் பரோட்டா போன்ற மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை இந்த நவீன காலங்களில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். இது உங்கள் உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும். இவற்றை பெரும்பாலும் இரவில் தவிர்ப்பது நல்லது.
திரவ உணவுகள் :
இரவில் நீங்கள் உறங்க செல்லும் முன்பு திரவ உணவு பொருட்களை உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் இரவில் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி போன்ற உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.மேலும் அதிக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட இந்த உணவு பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்து உங்கள் உணவு பழக்கத்தை மாற்றினாலே இரவில் நன்றாக தூங்கலாம்.