நாம் அதிக நேரத்தை செலவிடும் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் (online counter), ரிமைண்டர்(msg reminder) என இரு வசதிகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
WHATSAPP:
மெட்டா நிறுவனம் நடத்தி வரும் (WHATSAPP) வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், தங்களது பயணர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது புதிதாக இரு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்பில் online counter msg reminder
அதாவது வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் குழுக்கள்(Whatsapp group) வைத்து உள்ளனர். குடும்பத்தினர், நண்பர்கள் என குரூப் ஆரம்பித்து, அதில் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். ஆனால் ஒரு சில பேர், ஆன்லைனில் இருந்து கொண்டே Replay பண்ணாமல் இருப்பார்கள். தற்போது வந்துள்ள வசதியால் அப்பாற்பட்டவர்கள் மாட்டிக் கொள்வார்கள். அதாவது, வாட்ஸ்அப் குழுவில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இனி ஆன்லைனில் இருந்து கொண்டே மெசேஜை படிக்காமல் இருப்பவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.
ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!
அதுமட்டுமின்றி, பயனர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு ஆன்லைன் தெரிவதை மறைக்கும் வசதியையும் அளித்துள்ளது. தெளிவாக சொல்ல போனால், ஆன்லைன் விசிபிலிட்டியை ஆப் செய்துவிட்டு, ஆன்லைனில் இருந்தாலும் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது. அதுமட்டுமின்றி இன்னொரு புது வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், மெசேஜ் ரிமைண்டர் வசதியை கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த இரு வசதிகளும் வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை முறையில் உள்ளது என்றும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!