இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட் தடை
இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட் தடை: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த வருடம் மார்ச் மாதம் மட்டும் வாட்ஸ்அப் சுமார் 7.9 மில்லியன் அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி மோசடி உள்ளிட்டவைகளை குறித்து தங்களுக்கு கிடைக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்து வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப விதிகள் பிரிவு 4(1) (d)-இன் கீழ் வாட்ஸ்அப் மோசடிகள் தொடர்பான புகார் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது சம்பந்தமான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.