
இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம்: நாடு முழுவதும் பெரும்பாலான மக்களால் வாட்சப்(Watsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். யூசர்களை கவரும் விதமாக தொடர்ந்து பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் யூசர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா வாதிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அப்போது அவர் “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் என்பது வாட்ஸ் அப்பில் செய்திகளை (Messages) அனுப்பிய வரும், அதை பெறுபவரும் மட்டுமே அவர்களை அனுப்பிய செய்திகளை பார்க்க முடியும் என்று கூறினார். எனவே இந்த பிரைவசியை (Privacy) கருத்தில் கொண்டு தான் பெரும்பாலான மக்கள் வாட்சப்யை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப விதிகள் இந்த அம்சம் மீறும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது போன்ற சட்டங்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. எனவே எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கை நீதிபதி வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.