Breaking News: இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணிக்கலாம்: உலகில் வாழும் பல கோடி மக்கள் வாட்சப் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வாட்சப் நிறுவனம் பயணர்களுக்காக தொடர்ந்து பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது புதிய வசதியை வாட்ஸ்அப்பின் WABetaInfo தெரிவித்துள்ளது. அதாவது இன்டர்நெட் இல்லாமல் வாட்சப் பயன்படுத்தும் விதமாக, தெளிவாக சொல்லப்போனால் இன்டர்நெட் இல்லாமல் கோப்புகளை பகிரும் வசதியை கொண்டு வர இருப்பதாக WABetaInfo – இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணிக்கலாம்
அப்படி இந்த வசதியை வாட்சப் update செய்தால் போனில் Internet வசதியை on செய்யாமல் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்கள் உட்பட அனைத்தையும் ஷேர் (share) செய்து கொள்ள முடியும். தற்போது இந்த வசதியை வாட்ஸ்அப் சோதித்து வருகிறதாம்.
Also Read: நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – கூகுள் மேப்ஸ் கொடுத்த அசத்தல் அப்டேட் !
முதலில் இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கு கொண்டு வரப்படும். இதையடுத்து இந்த வசதி ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் புரியும் விதமாக சொல்ல போனால் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்து விட்டால் மேற்கண்ட கோப்புகளை கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம். விரைவில் இந்த வசதி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (26.07.2024)
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்