வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்: பொதுவாக மனிதர்களுக்கு ஏன் நாட்காட்டி(காலண்டர்) தேவைப்பட்டது என்றால், பண்டைய காலங்களில் மக்கள் இயற்கையை நம்பி இருந்த போது பருவங்கள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்தது. சூரியனை பூமி சுற்றி வருவதால் தான் மழை, வெயில், காற்று என தொடர்ந்து பருவ மாற்றங்கள் அடைந்து வந்தது. இதை அப்போது கணிக்க முடியாமல் திணறிய மக்கள் நாள் காட்டியை(காலண்டர்) கண்டு பிடித்தனர்.
வருஷத்துக்கு எதுக்கு 12 மாதங்கள்
குறிப்பாக எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் உருவாக்கிய காலண்டர்கள் நிலவின் சுழற்சியை மையமாக கொண்டு தான் உருவாக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக ரோமானியர்கள் பயன்படுத்திய காலண்டரில் வெறும் 10 மாதங்கள் தான் இருந்தது. மேலும் மாசத்துக்கு 30 அல்லது 31 நாட்கள் வைத்திருந்தனர். நிலவு பூமியை முழுமையாக சுற்றி வர 27.30 நாட்கள் ஆகும். அதற்காக தான் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் வைத்து அட்ஜஸ்ட் செய்துள்ளனர்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு டவுட் வரலாம். அப்ப எதுக்கு வாரத்திற்கு ஏழு நாட்கள் என கேட்கலாம்? பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு செவ்வாய் , புதன் , வியாழன், வெள்ளி, சனி என உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் தான் தெரியும். எனவே சூரியன், நிலவை கணக்கில் எடுத்துக் கொண்டு ஏழு நாட்களாக எடுத்துக் கொண்டார். இன்னும் தெளிவாக சொல்ல போனால் ரோமானியர் பயன்படுத்திய காலண்டரில் வருஷத்துக்கு 304 நாட்கள் மட்டுமே இருந்தது. மீதமுள்ள 60 நாட்களை அவர்கள் கணக்கில் சேர்த்து கொள்ளவில்லை.
இதனால் சூரியன் சுழற்சியால் ஏற்படும் பருவங்களை அவர்களால் கணிக்கமுடியமால் போனது. எடுத்துக்காட்டாக சொல்ல போனால் அவர்கள் இந்த தேதியில் மழை வரும் என்று கணித்திருந்தால் அதற்கு முன்னரே மழை வந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இதனை தொடர்ந்து கி மு 8ம் நூற்றாண்டில் முடி சூடிய NUMA POMPILIUS என்ற அரசன் மீதமுள்ள 60 நாட்களையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதனால் கடைசி மாதங்களாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் என 2 புதிய மாதங்களை டிசம்பருக்கு பின்னர் சேர்த்தனர். அதன் பின்னரே வருடதத்திற்கு 12 மாதங்கள் கிடைத்தது.
ஆனால் அதிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டது 2 மாதங்கள் சேர்த்த போதிலும் வருடத்திற்கு வெறும் 355 நாட்கள் மட்டுமே இருந்தது. இப்படியே காலங்கள் போன நிலையில் கிமு 48 நூற்றாண்டில் ரோமன் நாட்டின் அரசராக இருந்த JULIUS CAESAR தன் நாட்டில் இருந்த சிறந்த வானிலை ஆய்வாளர்களை வைத்து சூரிய சுழற்சியை வைத்து காலண்டரை உருவாக்கினார். அதை அடுத்த ஆண்டு கொண்டு வர கிமு 48 ஆண்டை நீளத்தை அதிகரித்தார். அதாவது 48ம் ஆண்டு மட்டும் 445 நாட்கள் இருந்துச்சு. வரலாற்றிலேயே அதிக நாட்கள் கொண்ட ஆண்டு என்றால் அது இதுதான். கொண்டு வந்த முக்கிய மாற்றம் என்னவென்றால் பூமி சூரியனை சுற்றி வர 365.25 நாட்கள் ஆகிறது.
எனவே 12 மாதங்களுக்கு 365 நாட்கள் வருவது போல் காலண்டரை மாற்றி அமைத்தனர்.
இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழும் 0 .25(6 மணி நேரம்) என்ன ஆனது என்று.
அந்த 6 மணி ஒவ்வொரு வருடமாக அதிகரித்து நான்காவது ஆண்டுக்கு மட்டும் 366 நாட்கள் கொண்டு வரப்பட்டது.
அதை தான் நாமும் leap year என்று அழைக்கிறோம். மேலும் JULIUS CAESAR குறிக்கும் விதமாக தான் 7வது மாதத்தில் ஜூலை என்று பெயர் வந்தது.
அதே போல் JULIUS CAESAR அவருக்கு அடுத்து வந்த மன்னனான august caesar முக்கியவத்துவம் படுத்துவதற்காக 8வது மாதம் ஆகஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
Also Read: ஜிம்முக்கு செல்பவரா நீங்கள்? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!!
அதனால் பிப்ரவரியில் இருந்த 30 நாட்களில் இரண்டு நாட்களை எடுத்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஒரு நாளும் , ஜூலை மாதத்திற்கும் ஒரு நாள் கொடுக்கப்பட்டு 31 நாட்கள் கணக்கிடப்பட்டன.
இதனால் தான் பிப்ரவரியில் 28 நாட்கள் இருக்கிறது. மேலும் லீப் ஆண்டில் மட்டும் எக்ஸ்ட்ரா வரும் ஒரு நாளை பிப்ரவரியில் 29 வது நாள் என கணக்கிடப்பட்டது.
ஆனால் இதிலும் ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது 1582 ம் ஆண்டு தான் பூமி முழுமையாக சூரியனை சுற்றிவர
365 நாட்கள் 5 மணி நேரம் 46 நிமிடங்கள் 48 செகண்ட் ஆகும் என POPE GREGORY என்பவர் கண்டுபிடித்தார்.
அவருடைய காலண்டர் தான் தற்போது நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா