Home » சினிமா » அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

பிரபல நடிகர் அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன் என்பது தொடர்பான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இவரை போல் காமெடியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் வைகை புயல் வடிவேலு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்பொழுது வரை இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

கஷ்டத்தில் இருப்பவர்கள் சோகத்தில் இருப்பவர்கள், வடிவேலு காமெடியை பார்த்து தான் சந்தோஷம் அடைவார்கள். அந்த அளவுக்கு அவருடைய காமெடி இருக்கும். ஒரு காலத்தில் மேலோங்கி இருந்த அவர் தேவையில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தனது சினிமா கெரியருக்கு அவரே ஆப்பு வைத்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். அதன்பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார். எல்லாருடன் ஜோடி போட்டு நடிக்கும் இவர் அஜித்துடன் மட்டும் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

அவரை அவாய்ட் செய்யும் காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும்  குழம்பி போய் இருக்கின்றனர். எழில் இயக்கத்தில் அஜித் குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ராஜா’ படத்தில், வடிவேலு அஜித் குமாருக்கு மாமாவாக நடித்திருந்தார். அப்படத்தின் ஷூட்டிங் போது, வடிவேலு, அஜித் குமாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பலமுறை அஜித் குமார் இதை கண்டித்தும், வடிவேலு தனது பேச்சில் மாற்றத்தைக் காட்டவில்லை. இதனால் அஜித் வருத்தம் அடைந்ததால், இனிமேல் அவருடைய படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று இப்பொழுது வரை கடைபிடித்து வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top