காது கேட்கும் திறன் திடீரென குறைய என்ன காரணம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான நபர்களுக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்து வருகிறது. ஆனால் அது சிலருக்கு எதற்கு காது கேட்கும் திறன் குறைகிறது என்பது குறித்து தெரியவில்லை.
நமக்கு காது கேட்காமல் போவதற்கு காரணம் உடல் சார்ந்தவையாகவும் இருக்கலாம், சுற்றுப்புறம் சார்ந்தவையாகவும் இருக்கலாம். அதில் சில முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காது கேட்கும் திறன் திடீரென குறைய என்ன காரணம்
- வயது ஏறயேற மாறும் இயல்பான மாற்றங்கள், அதனால் சுரப்பி மற்றும் நரம்பு செயல்பாடுகளின் குறைவு, காது கேட்கும் திறனை பாதிக்கக் கூடும்.
- அதிக நேரம் மிகுந்த சத்தத்தில் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என போன்ற செயல்களில் ஈடுபட்டால் காது நரம்புகளில் சேதம் ஏற்பட்டு கேட்கும் திறன் குறையும்.
- காது, குறிப்பாக மத்திய அல்லது உள்ளி காதுகளில் உள்ள தொற்று அல்லது அழற்சி, கேட்கும் திறனை தற்காலிகமாகக் குறைக்கலாம்.
- நம்முடைய காது நரம்புகள் அல்லது தலைப்பகுதியில் உள்ள மூளையின் கேட்பாற்றல் பகுதிகள் பாதிப்படைந்தால் கூட கேட்கும் திறன் குறையும்.
- அதுமட்டுமின்றி நம்முடைய உயர் இரத்த அழுத்தம் காரணமாகவோ அல்லது அதிக காய்ச்சல் மற்றும் இரத்த சீர்கேடு போன்ற காரணங்களால் கூட காது தொடர்பான சிக்கல்களை உருவாக்கலாம்.
- மேலும் நாம் சாப்பிடும் சில மருந்துகள் நரம்பு சேதத்தை ஏற்படுத்தி கேட்கும் திறனை பாதிக்கலாம்.
- இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு மருத்துவரை அணுகுவது முக்கியம்.
Also Read: தினதோறும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா