கருப்பு பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுணமா? அப்ப இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க!கருப்பு பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுணமா? அப்ப இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

கருப்பு பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுணமா? பொதுவாக நம் வாழ்வில் அதிகம் பார்ப்பது நல்ல நேரம், கெட்ட நேரம் பற்றி தான். குறிப்பாக நம் வெளியே கிளம்பும் பொழுது குறுக்கே கருப்பு பூனை சென்றால் அது  அபசகுணம் என்று பெரியவர்கள் சொல்லுவதுண்டு. அந்த அளவுக்கு பூனைகள் சில நேரம் அபசகுணமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது பெரியவர்கள் கூற்றுப்படி, பூனைகள் வீட்டுக்குள் வளர்க்க கூடாது என்றும். அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வருகின்றன. குறிப்பாக பூனை இடமிருந்து வலமாக சென்றால்  அது அபசகுணம் என்றும், அதே போல் வலமிருந்து இடமாக சென்றால் அது மங்களகரமான விஷயமாக பார்க்கப்பட்டது.

கருப்பு பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுணமா?

சில நேரங்களில் பூனை அழுவது போல் சத்தம் கேட்கும். அது சாதகமற்றதாக  பார்க்கப்படும். அதுமட்டுமின்றி வாகனத்தில் செல்லும் பொழுது கருப்பு பூனை குறுக்கே சென்றால் உடனே வண்டியை நிறுத்தி விடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் நம் எதற்கு வண்டியை நிறுத்துகிறோம் என்று நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. அதாவது கருப்பு பூனை குறுக்கே செல்லும் போது மாடு பயந்து விடும் என்பதால் மக்கள் வண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து செல்வார்கள். இது தான் நாளடைவில் மூடநம்பிக்கையாக மூடநம்பிக்கையாக உருமாறி தற்போது கெட்ட சகுணமாக பார்க்கப்படுகின்றது.

1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு?  கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *