Breaking News: இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல ஆண்களிடமும் சில பெண்கள் அத்துமீறி நடந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையில் உலகம் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் ஒரு பெண் ஒருவர் தன் மீது போடப்பட்ட போக்சோ வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும்
இதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விவாதம் பரபரப்பாக நடைபெற்றது. அதாவது, ” போக்சோ சட்டத்தை குழந்தைகளை பாலியல் சீண்டலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தான் கொண்டுவரப்பட்டது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் பாலியல் ரீதியாக ஏற்படும் குற்ற செயல்களில் ஈடுபடும் ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் பாலின பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் ,மூன்று மற்றும் நான்கு பிரிவுகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவை மையமாக வைத்து குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வகையில் ஏதேனும் பொருள் அல்லது உடல் உறுப்பை உள்நுழைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
Also Read: மது பிரியர்களே ஷாக்கிங் நியூஸ் – வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!!
அந்த வகையில், இது ஆணுறுப்பை மட்டுமே குறிக்கும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இருக்காது என தெரிவித்தார். எனவே இந்தியாவில் பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Delhi High Court
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்