Home » செய்திகள் » தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

தமிழக மக்களே.., வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு.., மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்?.., சூப்பர் அப்டேட்!!

மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு தொடர்ந்து நல திட்டங்களை திமுக தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் கலைஞர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் சேர ஏராளமான பெண்கள் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்தில் சேர ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இதனால் பலரும் புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதனால் தற்காலிகமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த மக்களுக்கு SMS அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த SMSயை வட்டாட்சியர் அலுவலகத்தில் காண்பித்து புது ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கலைஞர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக அரசு கூடிய விரைவில் புது ரேஷன் கார்டு பெற்றவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் வெகு சீக்கிரமாக புது ரேஷன் கடை விநியோகம் செய்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

70 ஆண்டுகளாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர்.., திடீர் மரணம்.., சோகத்தில் குடும்பத்தினர்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top